நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்
மதுரை,மார்ச்
மதுரை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய 12-ந்தேதியன்று 3 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். 13, 14 ஆகிய தினங்கள் விடுமுறை என்பதால் மனு தாக்கல் இல்லை. 15-ந்தேதியன்று ஒரே நாளில் 29 வேட்பாளர்கள் மொத்தம் 35 மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில், 3-வது நாளான நேற்று மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்தியும், வடக்கு தொகுதியில் எல்.யு.சி.ஐ. (கம்யூனிஸ்டு) சார்பில் வால்டேர் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதுபோல் மதுரை மத்திய தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள், அவருக்கு மாற்றாக பார்வதி, மதுரை கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் லதா, அவருக்கு மாற்றாக வீரலட்சுமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல் சோழவந்தான் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செங்கண்ணன் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜஸ்டின் ஜெயபாலிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக ஆனந்தகுமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இது வரை இந்த தொகுதியில் 6 மனுக்கள் வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.