கல்லூரிக்கு செல்லும்படி பெற்றோர் வற்புறுத்தியதால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை

கல்லூரிக்கு செல்ல கூறி பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவர் தற்கொலை

Update: 2021-03-16 20:23 GMT
ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா குந்தகொல்லா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 19). இவர் லிங்கசுகூர் டவுனில் உள்ள கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் கல்லூரி விடுதியில் அவர் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மஞ்சுநாத் தனது வீட்டிற்கு சென்று இருந்தார்.

 அதன்பின்னர் அவர் தனது பெற்றோரிடம் எனக்கு படிக்க விருப்பம் இல்லை. கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பெற்றோர் கல்லூரிக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் நேற்று காலை தான் தங்கி இருந்த கல்லூரி விடுதியில் வைத்து மஞ்சுநாத் விஷம் குடித்தார். அவரை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக லிங்கசுகூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ராய்ச்சூர் ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் மஞ்சுநாத் இறந்து விட்டார். இதுகுறித்து லிங்கசுகூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்