மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல்

வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் இருந்த ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-16 20:16 GMT
வேப்பந்தட்டை:

வாகன சோதனை
பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை தாலுகா வெங்கலம் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், தழுதாலை தாழைநகரை சேர்ந்த செல்வகுமார் என்பதும், அவரிடம் இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், அந்த பணத்தை பறிமுதல் செய்து, பெரம்பலூர் சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்