முக கவசம் அணியாவிட்டால் பொதுமக்களுக்கு அபராதம்

முக கவசம் அணியாவிட்டால் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-16 20:16 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு இலவச முக கவசங்களை வழங்கி பேசுகையில், மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் அணிய தவறும் பொதுமக்களுக்கு ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறும் பொதுமக்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக கூடும் இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்