அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது

அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது

Update: 2021-03-16 18:12 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே சமயன்வலசை பகுதியில் சிலர் கள்ளத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தேர்போகியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது36), குணா (24), சரத்குமார் (23) உள்பட 5 பேரை கைது செய்தனர். மணல் மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்