பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கீழக்கரை
கீழக்கரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கீழக்கரை துணை சூப்பிரண்டு கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராடும் சமூக ஆர்வலர் வீரகுல தமிழர் படை மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் மீதான பொய் வழக்குகளை கண்டித்தும், கீழக்கரையை சுற்றி போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் வீரகுல தமிழர் படை இபுராகீம், எஸ்.டி.பி.ஐ. நகர செயலாளர் மற்றும் பொருளாளர் தாஜூல் அமீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.