விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2021-03-16 13:47 GMT
விளாத்திகுளம்:
விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம் ஆற்றுப்பாலத்தில் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து தொடங்கி எட்டயபுரம், மதுரை ரோடு வழியாக தாலுகா அலுவலகத்தில் முடிவு பெற்றது. பேரணியில் விளாத்திகுளம் தாசில்தார் ரகுபதி, மண்டல துணை தாசில்தார் சரவணப்பெருமாள், ராமகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் தபாலமுருகன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஆரோக்கியசாமி, விளாத்திகுளம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், அலுவலக பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், விளாத்திகுளம் பேருராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் கலந்துகொண்டனர். மேற்படி நிகழ்ச்சியினை விளாத்திகுளம் வருவாய் ஆய்வாளர் மாடசாமி மற்றும் விளாத்திகுளம் கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி ஆசியோர் ஏற்பாடு செய்தனர்.

மேலும் செய்திகள்