மோட்டார் சைக்கிளில் சென்ற இரும்பு வியாபாரியிடம் ரூ4 லட்சம் பறிமுதல்

கோவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரும்பு வியாபாரியிடம் ரூ.4 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-16 02:07 GMT
கோவை

கோவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரும்பு வியாபாரியிடம் ரூ.4 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் சோதனை 

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப் பட்டு வருகிறது. 
இதற்காக அவர்கள் பல இடங்களில் வாகன சோதனையும் நடத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் கோவை சங்கனூரில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இரும்பு வியாபாரி  

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் சென்ற மோட்டார் சைக்கிளில் ரூ.4 லட்சம் இருந்தது. 

உடனே அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர், சக்திவேல் என்பதும், இரும்பு வியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரம் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துச்செல்வ தாகவும் தெரிவித்தார்.

ரூ.4 லட்சம் பறிமுதல் 

 உடனே அதிகாரிகள் அந்த பணத்துக்கான ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் சக்திவேலிடம் இருந்து ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 

பின்னர் அந்த பணம் கோவை வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்