கோவையில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 70 ஆக உயர்ந்தது
கோவையில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 70 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
கோவை
கோவையில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 70 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
70 ஆக உயர்ந்தது
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது சற்று அதிகரித்து செல்கிறது. அதில் கோவை மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
அதன்படி மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 543 ஆக உயர்ந்தது.
மூதாட்டி பலி
மேலும் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 49 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி 55 ஆயிரத்து 436 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 421 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தவிர கொரோனா காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 67 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 686-ஆக உயர்ந்து உள்ளது.
2 மாதங்களுக்கு பிறகு
கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி ஒரே நாளில் 80 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு பிறகு கோவையில் தொற்று எண்ணிக்கை 70 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.