அரூர், பென்னாகரத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3.73 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

அரூர், பென்னாகரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3.73 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-16 02:06 GMT
அரூர்:
அரூர், பென்னாகரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3.73 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை 
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மொரப்பூர் சாலையில் அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அரூர் நோக்கி வந்த லாரியை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 900 இருந்தது தெரியவந்தது. 
இதுதொடர்பாக லாரி டிரைவரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 23) என்பதும், உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து அரூர் உதவி கலெக்டர் முத்தையனிடம் ஒப்படைத்தனர்.
பென்னாகரம்
இதேபோல் பென்னாகரம் சட்டசபை  தொகுதிக்குட்பட்ட நாகதாசம்பட்டி சாலையில் வேளாண்மை அலுவலர் மணிவண்ணன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த பருவதனஅள்ளியை சேர்ந்த முனியப்பன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்