சேலம்: பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

சேலம்: பெண்ணை தாக்கிய வாலிபர் கைது.

Update: 2021-03-16 01:29 GMT
சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கனகா (வயது 50). இவர் அந்த பகுதியில் தள்ளுவண்டியில் கம்மங்கூழ் வைத்து விற்பனை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (25). இவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆகாஷ், கனகாவை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்