நத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் முளையூரில் பிரசாரத்தை தொடங்கினார்; அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என வாக்குறுதி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முளையூர் கிராமத்தில் அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் அங்குள்ள நல்அறவான்கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.

Update: 2021-03-16 01:15 GMT
முளையூரில், நத்தம் இரா.விசுவநாதன் பிரசாரத்தை தொடங்கிய போது எடுத்தபடம்.
திறந்த ஜீப்பில் நின்று இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பேசியதாவது:

அரசு கலைக்கல்லூரி
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற அம்மாவின் ஆணைக்கிணங்க நீங்கள் அனைவரும் வழக்கம் போல் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் மறக்காமல் வாக்களிக்க வேண்டும், நத்தம் தொகுதியில் பல கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் அனைத்து துறைகளிலும் நடைபெற்றுள்ளது. 
மீண்டும் வெற்றி பெற்று வந்ததும் மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து புயல் வேகத்தில் செயல்படுத்தப் படும். நத்தம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழில் மையம் அமைக்கப் படும் எனவும், மேலும் நத்தம் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றும்பேசினார்.

மாதம் ரூபாய் 1500
மேலும் விவசாயிகளுக் காகவும், மகளிர்களுக்காகவும் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குடும்ப பெண்களுக்கு மாதம் ரூபாய் 1500-ம், முதியோர் உதவி ரூ ஆயிரத்திலிருந்து ரூ 2 ஆயிரமாகவும் தருவதற்கு தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது. மீண்டும் ஐந்தாவது முறையாக போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் மறக்காமல் வாக்களிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். தமிழகத்தை முதலமைச்சரும், துணை முதல் அமைச்சரும் அனைத்து துறைகளிலும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இணைந்து மக்களுக்காக செயல்பட்டனர். 

இவ்வாறு நத்தம் இரா.விசுவநாதன் பேசினார். தொடர்ந்து  சின்ன முளையூர், கட்ட புளிப்பட்டி, நரசிம்ம புரம், எர்ரமநாயக்கன்பட்டி, சத்திரம், உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், புன்னப்பட்டி, காட்டுவேலம் பட்டி, பண்ணுவார்பட்டி, பாலப்பநாயக்கன்பட்டி மற்றும் பள்ளபட்டி போன்ற பகுதிகளில் பிரசாரம் செய்தார். 

கலந்து கொண்டவர்கள்
இந்த பிரசாரத்தின் போது நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, மணிகண்டன், சின்னு, ஜெயசீலன், நகர் செயலாளர் சிவலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், மாவட்ட கவுன்சிலர் பார்வதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலுச்சாமி,சவரிமுத்து, வேலம்பட்டி கண்ணன், ஜெயப் பிரகாஷ், ஆண்டிச்சாமி உலுப்பகுடி கூட்டுறவு பால் பண்னை தலைவர் சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் ஆசை, கட்சி நிர்வாகிகள் வக்கீல் ராமநாதன், இளவழுதி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்