திருவெறும்பூர் பகவதிபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் அனல் பறக்கும் பிரசாரம்

திருவெறும்பூர் பகவதிபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் அனல் பறக்கும் பிரசாரம் செய்தனர்.

Update: 2021-03-16 01:00 GMT
மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான எம்.முருகானந்தத்தின் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதி மய்ய கட்சியின் நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் சகுபர் சாதிக் மற்றும் நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோருடன் கிளை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் டார்ச்லைட் சின்னத்தை முன்னிறுத்தி திருவெறும்பூர் தொகுதியில் உள்ள மலைக்கோயில் பகவதிபுரம் பகுதியில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று இரண்டாம் கட்டதேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர். மூன்றாம் கட்ட பிரசாரம் வருகிற 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்