சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி,
ரெயில்வே, வங்கி உள்பட நாட்டில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் ஜங்ஷன் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், கரிகாலன், மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.