அரசு ஊழியர்கள் தேசிய சங்க ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் தேசிய சங்க ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி,
பாரதீய மஸ்தூர் சங்கத்தில் இணைந்துள்ள மத்திய-மாநில அரசு ஊழியர்கள் தேசிய சங்க பேரவை சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரவை ஒருங்கிணைப்பாளர் நாராயணசாமி, பொதுத்துறை சங்க அகில இந்திய தலைவர் அங்குசாமி, பொன்மலை ஒர்க்ஷாப் மாவட்ட தலைவர் அம்பவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு துறைகளை தனியார்மயமாக்குவதையும், பொதுத்துறை நிறுவனங்களில் அரசு முதலீடு பங்கினை திரும்ப பெற்று தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பான மருத்துவ வசதி அனைத்து வயதான ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.