பொதுமக்கள் சாலை மறியல்
சாத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
சாத்தூர் அருகே மேட்டமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட வீரபாண்டியபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர வேண்டும். கூட்டுக்குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்ெதாட்டி கட்டி முடிக்கப்பட்ட பின்பும் இதுவரை குடிநீர் வசதி செய்து தரபடவில்ைல என்றும் உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சாத்தூர்- சிவகாசி மெயின் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது இதுகுறித்து உடன் நடவடிக்ைக எடுக்கவில்லை என்றால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கூறினர். அப்போது போலீசார், அவர்களிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பின்பு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.