திருப்பத்தூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம். கலெக்டர் எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அ½ராதம் விதிக்கப்படும் கலெக்டர் சிவன்அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர்
அதிகரித்து வருகிறது
தமிழகத்தில் கொரோனா தொற்று ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கிலேயே கண்டறிப்பட்டு வருகின்றது. இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முககவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல், கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், மற்றும் அதிக கூட்டங்களுக்கு செல்வதனை தவிர்த்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
அபராதம்
தற்போது கொரோனா தொற்று நோய் தீவிரமாக பரவுதலை தடுக்கும் பொருட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை பின்பற்ற தவறும் பட்சத்தில் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க கடமைப்பட்டுள்ளது. எனவே பொது இடங்களில் முககவசம் அணிய தவறும் பொதுமக்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியினை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5,000 அபராம் விதிக்கப்படும்.
ஒத்துழைக்க வேண்டும்
சட்டமன்ற தேர்தல்பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து முககவசம், சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தகவலை கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.