மரங்கள் செடி கொடிகளில் திடீர் தீ விபத்து
மரங்கள் செடி கொடிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நொய்யல்
கரூர் மாவட்டம் கூலக்கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 57). இவர் மூலிமங்கலம் பிரிவு ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது எதிரே உள்ள காட்டில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிப்போய்தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து கல்யாணசுந்தரம் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைஅலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.