மருத்துவக்கல்லுரி மாணவர்கள் நூதன போராட்டம்
சிதம்பரம் மருத்துவக்கல்லுரி மாணவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கடந்த 17 நாட்களாக நடப்பாண்டு முதல் குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி தினமும் மாலையில் அறவழிபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 18-வது நாளாக நீடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் ஜஸ்டிஸ் என்ற எழுத்து வடிவத்தில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடப்பாண்டு முதல் குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.