வேலூர் மாநகராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்

வேலூர் மாநகராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்.

Update: 2021-03-15 18:01 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-ம், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு ரூ.250-ம் 4 சக்கர வாகனங்களில் செல்வோருக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறை நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். 

அதன்பேரில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்களில் முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் மற்றும் சளிமாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு நேற்று ஒரேநாளில் ரூ.12,100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது என்று மாநகராட்சி நல அலுவலர் சித்ரசேனா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்