திருக்கோவிலூர் அருகே வியாபாரியிடம் ரூ.92 ஆயிரம் பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே வியாபாரியிடம் ரூ.92 ஆயிரம் பறிமுதல்

Update: 2021-03-15 17:29 GMT
திருக்கோவிலூர்

திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் திருக்கோவிலூர் அருகே உள்ள திருவண்ணாமலை மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.91 ஆயிரத்து 900 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

விசாரணையில் ஆட்டோவில் வந்தவர் திருக்கோவிலூரை அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த வாழைப்பழ வியாபாரி குப்புசாமி(வயது 60) என்பதும் உரிய ஆவணம் இல்லாமல் பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்