திண்டிவனத்தில் தொழிலாளி தற்கொலை

திண்டிவனத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

Update: 2021-03-15 16:55 GMT
திண்டிவனம், 

சென்னை திருவல்லிக்கேணி சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த்வர் மணிகண்டன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி அகல்யா (31). திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், 11 வயதில் ஒரு மகள், 8 வயதில் ஒரு மகன் உள்ளனர். 

இவர்கள் தற்போது திண்டிவனம் கிடங்கல் 2 பகுதி சிங்காரத்தோப்பில் உள்ள அகல்யாவின் தாய் வீட்டுக்கு அருகே ஒரு வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். 

இந்த நிலையில் சம்பத்தன்று கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அகல்யா அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

 இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்