தூத்துக்குடியில் தேர்தல் பாதுகாப்பு ரோந்துக்குழு போலீசார் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு ரோந்து குழு போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2021-03-15 11:59 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு ரோந்து குழு போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும், தலா ஒரு சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 158 தேர்தல் பாதுகாப்பு ரோந்து போலீஸ் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த போலீஸ் குழுவினர் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு 4.4.2021 முதல் 7.4.2021 வரை சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரிகளுடன் வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களை தாலுகா அலுலகங்களில் இருந்து பெற்று, வாக்குச்சாவடி மையத்தில் ஒப்படைத்து, வாக்குப்பதிவு முடிவடைந்து, அவற்றை வாக்கு எண்ணும் இடத்தில் ஒப்படைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
அறிவுரை
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கோபி, தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றம் போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்