ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும்; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரச்சாரம்
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று ராஜபாளையம் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். ராஜபாளையத்தில் காந்திசிலை, பழைய பேருந்து நிலையம், பஞ்சுமார்க்கெட், மலையடிபட்டி ஆகிய பகுதிகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அமைச்சர் பேசும்போது, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகின்றனர். ஏழை எளிய மக்களின் நாடி துடிப்புகளை அறிந்து திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகின்றது. அதிமுக அரசு ஏழைகளுக்கான அரசாகதான் இயங்கி கொண்டிருக்கின்றது. இந்த அரசு தொடர்ந்திட வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2500 வழங்கப்பட்டது.
தற்போது குடும்பத்திற்கு வருடம் 6 சிலிண்டரும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். சுமார் 16 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். கூட்டுறவு வங்கியில் 6 பவுன் தங்க நகை கடன் தள்ளுபடி எனவும் தமிழகமுதல்வர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒரு பொற்கால ஆட்சியை எடப்பாடியார் கொடுத்து வருகின்றார். இந்த பொற்கால ஆட்சி தொடர்ந்திட வாக்காளர்கள் இரட்டை இ லை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று இங்குள்ள பல்வேறு சமுதாய நிர்வாகிகள் என்னை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் விருப்பத்தின் பேரில்தான் இந்த தொகுதியில் நான் போட்டியிடுகின்றேன். ராஜபாளையம் தொகுதியில் நான் அமைச்சராக இருந்த 10ஆண்டுகளில் சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம், கொண்டாநகரம் கூட்டு குடிநீர் திட்டம், ரூ40 கோடியில் புதிய சாலைகள், ராஜபாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இப்படி பல்வேறு திட்டங்களை நான்தான் கொண்டு வந்துள்ளேன். தொடர்ந்து ராஜபாளையம் தொகுதி முன்னேற்றத்திற்காக உங்கள் வீட்டுபிள்ளையாக நான் பாடுபடுவேன்.
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்கள் சகோதரனாக நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் தொண்டனாக நான் இருப்பேன் என்று பேசினார். பிரச்சாரத்தில் ராஜபாளையம் அதிமுக நகர செயலாளர் ரானாபாஸ்கரராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் குருசாமி, நவநத்தினம், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் துரைமுருகேசன், சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜபாண்டியன், செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்குத்துரைபாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராதாகிருஷ்ணன்ராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த் மாவட்டக் கழக இணைச் செயலர் அழகுராணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் செய்யதுசுல்தான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ராஜபாளையம் நகர் பகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.