சேலம் அரிசிபாளையத்தில், ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா; தெருவில் பொதுமக்கள் செல்ல தடை

கொரோனா நோய் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-03-14 23:09 GMT
சேலம்:
கொரோனா நோய் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்தநிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அரிசிபாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த குடும்பத்தினர் வசிக்கும் வீடு வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்பு கம்புகளால் அடைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்