கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Update: 2021-03-14 22:57 GMT
கோவை

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவர், மாலையில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

கமல்ஹாசன் போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (திங்கட்கிழமை)  தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவர் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சி வேட்பாளர்களை எதிர்கொள்கிறார்.

இன்று வேட்புமனு தாக்கல்

கமல்ஹாசன் இன்று (திங்கட்கிழமை) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர், இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, கோவை விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். 

பின்னர் கார் மூலம் கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகமான மாநகராட்சி மத்திய மண்டல அலுவலத்திற்கு வருகிறார்.
மதியம் 1.30 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். 

இதைத்தொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸ் தனியார் ஓட்டலில் அவர் ஓய்வெடுக்கிறார். மேலும் அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

தேர்தல் பிரசாரம்

அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், இன்று மாலை 6 மணிக்கு கோவை ராஜவீதியில் உள்ள தேர்முட்டியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர், பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்து, டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்கு சேகரிக்கிறார்.

மேலும் செய்திகள்