புதூர்
திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக டாக்டர் சரவணன் இருந்தார். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று காலையில் அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். உடனடியாக அவர் மதுரை வடக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வடக்குதொகுதியில் ஏற்கனவே சீனிவாசன் என்பவருக்கு சீட் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கே.புதூரில் பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் தொடங்கி கடந்த சில நாட்களாக கட்சி பணிகளை கவனித்தார். ஆனால் வடக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் டாக்டர் சரவணனுக்கு ஒதுக்கக்கூடாது என பா.ஜ.க.வினர் புதூர் தேர்தல் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் கலைந்து சென்றனர்.