வாக்குப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்குப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2021-03-14 19:49 GMT
அறந்தாங்கி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த்மோகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடந்த தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவான மணிவிளான் பகுதியில் ஆவணத்தாங்கோட்டை மேற்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் வில்லுப்பாட்டு மற்றும் பரமபதம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்