வள்ளியூர் அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

வள்ளியூர் அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-14 19:22 GMT
வள்ளியூர்:

வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 43). டிரைவரான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். 

இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த காளியப்பன் வள்ளியூர் கிழவநேரி குளம் பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்