வேலூர் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தாய்-மகன் பலி

வேலூர் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தாய்-மகன் பலியாகினர்.

Update: 2021-03-14 19:02 GMT
வேலூர்

தாய்-மகன்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த சந்திராபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி மல்லிகா (வயது 50). இவர்களின் மகன் சதீஷ் (27) வேலூர் அடுக்கம்பாறை பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி மற்றும் இனிப்பு கடை நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக தந்தையும், தாயும் இருந்துள்ளனர். 3 பேரும் கடையின் மேல்தளத்தில் உள்ள அறையில் தங்கியதாகவும், வாரம் ஒருமுறை வீட்டிற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் தாய் மல்லிகாவுடன் அடுக்கம்பாறையில் இருந்து சொந்த ஊரை நோக்கி சென்றார். வேலூரை அடுத்த ரெட்டேரி கோடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது. 

மரத்தில்மோதி பலி

இதில் பலத்த காயமடைந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதீஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இது குறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். 
இந்த விபத்து குறித்து அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்