புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையை அடுத்த தாயில்பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வெம்பக் கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கடைகளில் சோதனை செய்தார். அப்போது ராமமூர்த்தி (வயது 55), முத்துக்கனி (50) ஆகிய 2 பேரின் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் ைகது செய்த போலீசார், அவர்களிடம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.