கள்ளக்குறிச்சி அருகே 193 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
கள்ளக்குறிச்சி அருகே 193 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே நாகலூர்-வடபூண்டி சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலரும், சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளருமான தனபால் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழி மறித்து அதில் இருந்த சாக்குமூட்டையை சோதனை செய்தபோது அதில் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள 193 மதுபாட்டில்கள் இருந்தது. விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்த தங்கவேல் மகன் ராஜேந்திரன் (வயது 45) என்பதும், தியாகதுருகம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி விற்பனைக்காக எடுத்துச்சென்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மது பாட்டிலை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கள்ளக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர்.