கடத்தூர் அருகே கரும்பு வியாபாரி அடித்துக்கொலை: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கடத்தூர் அருகே கரும்பு வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடத்தூர்,
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள முத்தனூர் கோம்பை பகுதியை சேர்ந்தவர் லோகிதாசன் என்கிற முனியப்பன் (வயது 35). கரும்பு வியாபாரியான இவர் கடந்த ஜனவரி மாதம் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தனூர் கிராமத்தை சேர்ந்த முத்து மகன் ரகு வயது (30), முருகேசன் மகன் முருகன் வயது (30), கந்தன் மகன் விஜயன் வயது (28), மகாலிங்கம் மகன் விவேகானந்தன் வயது (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ரகு உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கார்த்திகா உத்தரவிட்டார். இதையடுத்து கடத்தூர்போலீசார் அரூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
----