சங்கராபுரம் தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

சங்கராபுரம் தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-14 16:26 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி ராமு தலைமையில் போலீஸ்காரர்கள் காதர்கான், பாலன் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று எல்.என்.பட்டி சோதனை சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.65 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சங்கராபுரம் தாலுகா, தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்த சடையப்பன் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சையத்காதர், சத்யநாராயணன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, மண்டல தாசில்தார் மாரியாப்பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோல் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நிலை கண்காணிப்பு குழு அதிகாரி ராஜசேகர் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் அஞ்சலை, குருமூர்த்தி ஆகியோரை கொண்ட குழுவினர் சங்கராபுரம் தீயணைப்பு நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தேவபண்டலம் கிராமத்தை சேர்ந்த முகமத்ரபிக் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்த ரூ.61 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்து சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலுவிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்