பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு தி.மு.க.வினர் 2 பேர் கைது

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூலில் அவதூறு செய்தி பரப்பியதாக தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-03-14 15:44 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளராக மீண்டும் களம் இறங்குபவர்  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். 

இவர் மீது பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியை சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் பட்டீஸ்வரன் மற்றும் கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்த தி.மு.க.பிரமுகர் தாஸ்பிரபு அவதூறாக  முகநூலி்ல் பதிவு செய்து வருவதாக அ.தி.மு.க.தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளைப் பரப்பி தேர்தல் நேரத்தில் மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில், செயல்பட்டதாக தெரியவந்தது. 

இதையடுத்து, ஆகிய இருவரையும் கிழக்கு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்