கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தேடும் பணி தீவிரம்

பொள்ளாச்சி அருகே கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

Update: 2021-03-14 15:25 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகேஉள்ளஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தஅம்சாவேல். இவரது மகன்பிரசாந்த் என்கிற புருஷோத்தமன் என்பவர் (19).ஐ.டி.ஐ. படித்துள்ளார். பொள்ளாச்சியில்உள்ள ஒரு பணிமனையில் தொழிலாளராகவேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில், கடந்த7-ந்தேதி முதல் பிரசாந்த் காணவில்லை.இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ்நிலையத்தில் அம்சா வேலால் புகார்அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, போலீசார் வாலிபர் மாயம் எனவழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் விஜயன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

விசாரணையில், சேத்துமடை அண்ணாநகரைச்சேர்ந்தஉதயகுமார் என்பவர் பிரசாந்த் என்கிற புருஷோத்தமனிடம் பணம் கடன் கேட்டுள்ளார்.அப்போது, அவர் தன்னிடம் பணம் இல்லைஎன கூறியுள்ளார். 

அதற்கு உதயகுமார்விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி இருக்கிறாய் என கூற அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில், ஆத்திரம் அடைந்த உதயகுமார்,தனது நண்பர் என்று கூட பாராமல் பிரசாந்த்தைகாண்டூர் கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக தெரியவந்தது. 

இதையடுத்து, உதயகுமார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சம்பவம் நடந்து 5 நாட்களுக்குமேலாகியும்பிரசாந்த் உடல் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், நேற்றுகாண்டூர் கால்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதியில் உடல் கிடக்கிறதா? என, வருவாய் துறை, பொதுப்பணித் துறை, காவல்துறை தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை இணைந்துகால்வாயில் தேடுதல் பணியில்தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் செய்திகள்