கெங்கவல்லி குப்பை கிடங்கில் திடீர் தீ

கெங்கவல்லி பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

Update: 2021-03-14 12:36 GMT
கெங்கவல்லி,

கெங்கவல்லி பேரூராட்சி பகுதியில் அகற்றப்படும் குப்பைகள் கணவாய்காட்டில் அமைந்துள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று குப்பை கிடங்கில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பேரூராட்சி பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது. 

இது குறித்து  கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகள்