கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவில் மயான சூறை திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் மயான சூறை திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2021-03-14 02:39 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவில் மயான சூறை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12-ந் தேதி மகா சிவராத்திரியையொட்டி சக்தி கரகம், அக்னி கரகம், கங்கையில் நீராடிவிட்டு கோவிலுக்கு வருதல், முகவெட்டு மயானத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும், உடலில் எலுமிச்சை பழங்களை குத்தி கொண்டும், காளி வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து மதியம் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனத்தில் மயான சூறைக்கு புறப்பட்டது. வழியில் நின்ற பக்தர்கள் தேர் மீது உப்பு மற்றும் மிளகை தூவி வழிபட்டனர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.  தொடர்ந்து அம்மன் தேர் நகரில் ஊர்வலமாக சென்று நேதாஜி சாலையை அடைந்தது. 
அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்