ஓய்வு பெற்ற அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

தஞ்சையில், மனைவி இறந்த அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-13 21:18 GMT
தஞ்சாவூர்:
தஞ்சையில், மனைவி இறந்த அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மனைவி சாவு
தஞ்சை மேலவீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 66). இவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி மல்லிகா(60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மல்லிகா மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். மனைவி இறந்ததால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார். மேலும் மனைவி இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.
விஷம் குடித்து தற்கொலை
இதனையடுத்து வீ்ட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்தார். இதில் கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தஞ்சை நகர மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்