புஞ்சைபுளியம்பட்டி சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனைக்கு காத்திருந்த தொழிலாளர்கள்
புஞ்சைபுளியம்பட்டி சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் காத்து நின்று தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் காத்து நின்று தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
கொரோனா தொற்று
ஈரோடு மாவட்ட எல்லையான புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கோவை மாவட்ட பகுதியில் கொரோனா தொற்று பரவி வருகிறது.
கொரோனா பரிசோதனை முகாம்
இதனால் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூர் போலீஸ் சோதனை சாவடியில் புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இதையொட்டி அந்த வழியாக திருப்பூர், கோவை மாவட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அந்தந்த நிறுவன வாகனங்களில் தொழிலாளர்கள் சென்றனர்.
நீண்ட வரிசையில்...
உடனே மருத்துவ குழுவினர் தொழிற்சாலை நிறுவன வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான தொழிலாளர்கள் வரிசையாக காத்து நின்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறுகையில், ‘கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடைபெறும்,’ என தெரிவித்தனர்.