இலத்தூர் அருகே விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலி

இலத்தூர் அருகே விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலியானார்.

Update: 2021-03-13 19:54 GMT
அச்சன்புதூர்:

புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி காட்டு நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சங்கிலியாண்டி மகன் குருசாமி (வயது 35). இலத்தூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று புளியங்குடியில் இருந்து இலத்தூரை நோக்கி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் புன்னையாபுரம் அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற கார், குருசாமியின் மோட்டார் சைக்கிளில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட படுகாயம் அடைந்த குருசாமியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை குருசாமி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருசாமிக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்