மகளுடன் கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய தந்தை கைது

மகளுடன் கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய தந்தை கைது

Update: 2021-03-13 19:20 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 22). இவரது மனைவி தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். ஈஸ்வரனின் மனைவியும், அவரும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஈஸ்வரனின் மனைவி செல்போன் எண்ணிற்கு அந்த மாணவியின் தந்தை சேக்முகமது இக்பால் (52) ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி உள்ளார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்முகமது இக்பாலை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்