சிறுமியை கட்டிப்பிடித்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
ஆரணி அருகே தண்ணீர் கேட்பது போல் வீடு புகுந்து சிறுமியை கட்டிப்பிடித்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
ஆரணி அருகே தண்ணீர் கேட்பது போல் வீடு புகுந்து சிறுமியை கட்டிப்பிடித்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பகுதியில் முயல் வளர்க்கும் ஒரு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி மட்டும் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பட்டு நெசவுத்தொழிலாளியான லோகநாதன் (வயது 42) என்பவர் அந்த வீட்டுக்கு வந்து, சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென உள்ளே நுழைந்துள்ளார்.
சபலத்தில் இருந்த தொழிலாளி சிறுமியை கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் லாகின், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரிகா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்ேசா சட்டத்தில் நெசவுத்தொழிலாளி லோகநாதனை கைது செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
15 நாள் காவல்
அவரை, மாஜிஸ்திரேட் எஸ்.மகாலட்சுமி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர், திருவண்ணாமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.