திருக்கோவிலூர் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு

திருக்கோவிலூர் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு

Update: 2021-03-13 17:42 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் சபரி(வயது 16). இவர் அரகண்டநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சபரி நேற்று மாலை திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் கீழையூர் தரைப்பாலம் அருகே குளிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டார். 
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் சபரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்