புதுச்சேரியில் 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் பாகூர் தொகுதி தவிர 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விசிக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் பாகூர் தொகுதி தவிர 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. திமுக சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு;-
உருளையன்பேட்டை - எஸ்.கோபால்
உப்பளம் - அனிபால்கென்னடி
மங்கலம் - சண்குமரவேல்
முதலியார்பேட்டை - எல்.சம்பத்
வில்லியனூர் - சிவா
நெல்லித்தோப்பு - கார்த்திகேயன்
ராஜ்பவன் - சிவக்குமார்
மண்ணாடிப்பட்டு - கிருஷ்ணன்
காலாப்பட்டு - முத்துவேல்
திருப்புவனை (தனி) - முகிலன்
காரைக்கால் - நாஜிம்
நிரவி திருப்பட்டினம் - நாக தியாகராஜன்