திண்டுக்கல் போலீஸ் மோப்பநாய் பிரிவுக்கு புதுவரவு ‘டிம்பி’

திண்டுக்கல் போலீஸ் மோப்பநாய் பிரிவுக்கு புதிய வரவாக டிம்பி என்ற நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-13 16:27 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் மோப்பநாய் பிரிவு செயல்படுகிறது. இங்கு 7 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இங்கு வெடிபொருளை கண்டறியும் மோப்பநாய்கள் மேக்சி மற்றும் லீமா, போதை பொருளை கண்டறியும் ரூனி, குற்ற வழக்குகளில் துப்புதுலக்கும் மோப்பநாய் ரூபி என 4 நாய்கள் உள்ளன.
பொதுவாக போலீஸ் மோப்பநாய்கள் 8 ஆண்டுகள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்படும். அதன்பின்னர் நாய்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். அந்த வகையில் மோப்பநாய் மேக்சி 8 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறது. இதனால் அதற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. 
அதற்கு பதிலாக, புதிதாக ஒரு மோப்பநாயை சேர்க்க வேண்டும். இதற்காக லேபரடார் எனும் வகையை சேர்ந்த பிறந்து 60 நாட்களே ஆன நாய்க்குட்டி நேற்று சீலப்பாடிக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அந்த நாய்க்குட்டிக்கு ‘டிம்பி’ என்று போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பெயர் சூட்டினார். இதையடுத்து மோப்பநாய் பிரிவில் அந்த நாய் சேர்க்கப்பட்டது. இதில் மோப்பநாய் பிரிவு போலீஸ்காரர்கள் மணிகண்டபிரபு, ராஜாசந்திரன் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்