ஜெய்வாபாய் பள்ளியில் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தேர்தலில் பணியாற்றுகிறவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 40 மண்டல அலுவலர்கள் மற்றும் 40 மண்டல உதவியாளர்கள் என மொத்தம் 80 பேருக்கு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வி.வி.பேட் தொடர்பான பயிற்சிவகுப்பு நடந்தது.
இதனை திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் கலந்துகொண்டு தொடங்கிவைத்து பேசினார். இதில் கலந்துகொண்டவர்களுக்கு வி.வி.பேட் எந்திரத்தை பயன்படுத்தும் முறை மற்றும் வாக்காளர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.