சேலம்- விருத்தாசலம் ரெயில் நேரம் மாற்றம்

சேலம்- விருத்தாசலம் ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-13 02:20 GMT
சூரமங்கலம்,

சேலம்-விருத்தாசலம் ரெயில் (வண்டி எண் 06122) ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் மற்ற 6 நாட்களில் வருகிற 15-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரெயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு சேலம் மார்க்கெட்டுக்கு 6.06 மணிக்கு சென்றடையும். பின்னர் இங்கிருந்து 6.07 மணிக்கு புறப்பட்டு சேலம் டவுனுக்கு 6.10 மணிக்கும், அங்கிருந்து 6.11 மணிக்கு புறப்பட்டு மின்னாம்பள்ளிக்கு 6.27 மணிக்கு சென்றடையும், பிறகு 6.28 மணிக்கு புறப்பட்டு ஏத்தாப்பூருக்கு 6.49 மணிக்கும், அங்கிருந்து 6.50 மணிக்கு புறப்பட்டு பெத்தநாயக்கன்பாளையத்துக்கு 6.55 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து 6.56 மணிக்கு புறப்பட்டு ஆத்தூருக்கு இரவு 7.07 மணிக்கு சென்றடையும். பின்னர் இங்கிருந்து இரவு 7.08 மணிக்கு புறப்பட்டு சின்னசேலம் 7.39 மணிக்கும், விருத்தாசலத்துக்கு இரவு 9.00 மணிக்கும் சென்றடையும்.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்