சுந்தராபுரத்தில் தே.மு.தி.க. நிர்வாகி காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

சுந்தராபுரத்தில் தே.மு.தி.க. நிர்வாகி காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

Update: 2021-03-13 00:59 GMT
போத்தனூர்,

கோவையை அடுத்துள்ள சுந்தராபுரம் ஜி.கே.ஸ்கொயர் பகுதியை சேர்ந்தவர் சின்னசேட் (வயது 40). இவர் தே.மு.தி.க.வின் குறிச்சி பகுதி அவைத்தலைவராக உள்ளார். சின்னசேட் வழக்கம்போல் வீட்டின் வாசலில் தனது காரை நிறுத்தி வைத்துவிட்டு தூங்க சென்றார். 

அப்போது மர்ம நபர்கள் தீவைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில், கார் தீப்பிடித்து எரிந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சின்னசேட்டுக்கு தகவல் அளித்தனர். பின்னர் அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். 

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தே.மு.தி.க. நிர்வாகி காருக்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்