கணபதியில் பழைய பொருட்கள் குடோனில் தீ

கணபதியில் பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-03-13 00:21 GMT
கணபதி,

கோவை கணபதி பாலமுருகன் நகரைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் செந்தில் ஆறுமுகம் (வயது40). இவர் கணபதி டி.பாலன் நகரில் உள்ள 3-வது வீதியில் நாச்சிமுத்து என்பவருக்கு சொந்தமான இடத்தில் பழைய பொருட்கள் குடோன் வைத்துள்ளார். 

 இதனால் அங்கு பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று இரவு குடோனில் மின்கசிவு ஏற்பட்டு பழைய பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்